Friday, 1 May 2020

திருப்பதி 'கோவிந்தா', 'கோவிந்தா’ நாமம்

"கோவு - இந்தா = கோவிந்தா... கோவிந்தா "
(தெலுங்கில் `கோவுஎன்றால் பசு. `இந்தாஎன்றால் எடுத்துக்கொள் என்று பொருள்.)
மகாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க முடிவு செய்து, மனித வடிவில் திருப்பதிப் பகுதியில் தோன்றினார். மனித உருவில் வந்த காரணத்தால் அவருக்கும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வுகள் இருந்தன. தான் பால் அருந்த ஒரு பசு இருந்தால் நலம் என நினைத்தார்.

அவர் வசிக்கும் மலைக்கு அருகிலேயே முனிவர் அகத்தியரின் ஆசிரமம் இருந்தது. கோசாலை ஒன்றை வைத்திருந்தார். வேங்கடேசன் அவர் குடிலுக்குச் சென்றார் ஒரு பசுவினை தானம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

பிரம்மச்சாரிக்கு தானம் செய்யக் கூடாது என்று சொல்வர். ஒருவன் இல்லறத்தில் இருக்கும்போதுதான், அவனுக்கு தானமாகத் தரப்படும் பசுவினை அவன் நல்ல முறையில் பராமரிப்பான்.

நீங்கள் தம்பதி சமேதராக இங்கு வருவீர்கள் என்றால் நான் அடுத்த கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானமென அளிக்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்துகொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குச் செல்லத் தொடங்கினார். அதற்கு முன்னர் அகத்தியரின் முனிவரின் இருப்பிடம் சென்றார். ஆனால், முனிவர் அப்போது அங்கு இல்லை.முனிவரின் சீடர்களே,

அவர்களிடம் பெருமாள், `அகத்தியர் தமக்கு ஒரு பசுவை தானமாகத் தருவதாக வாக்குப் பண்ணியிருக்கிறார்' என்பதைச் சொல்லி பசுவைப் பெற்றுச் செல்லவே தான் வந்திருப்பதாகச் சொன்னார். இந்த ஆசிரமத்தில் அனைத்தும் எங்கள் குருநாதர் அகத்தியருக்கே உரிமையானவை. குருதேவர் வந்ததும், நீங்கள் பசுவினை அவரின் திருக்கரத்தாலேயே பெற்றுச் செல்லலாம்" என்றனர்.

அவர்களின் குருபக்தியையும் அதிதிகளிடம் காட்டும் மரியாதையையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தன் நிரந்தர வாசஸ்தலம் நோக்கிப் புறப்பட்டார்.

சற்று நேரத்துக்கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார். உலகையே காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்கழித்துவிட்டதற்காக வருந்தினார். காமதேனுவைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக்கொண்டு பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக்கொண்டு சென்றார்.

வேகமாக நடந்ததில் கொஞ்சநேரத்திலேயே பெருமாள் நடந்து செல்வதை அகத்தியர் பார்த்து விட்டார். பெருமாளை நோக்கிக் குரல் கொடுத்தார்.

``சுவாமி கோவு - இந்தா" என்று சத்தமிட்டார்.

தெலுங்கில் `கோவு' என்றால் பசு. `இந்தா' என்றால் எடுத்துக்கொள் என்று பொருள். ஆனால் சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும். மீண்டும் சத்தமாக `சுவாமி கோவு இந்தா' என்று சொன்னார். அப்போதும் அவர் திரும்பவில்லை.

மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டேயிருந்தார்.

அதுவரை அன்னநடை போட்டுக்கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் விரைவாக நடக்க ஆரம்பித்துவிட்டனர். அகத்தியரோ தன் குரலை இன்னும் உயர்த்தி `கோவு இந்தா கோவு இந்தா' என்று வேகவேகமாக உச்சரிக்க அது கோவிந்தா... கோவிந்தா என்று ஆனது.

கோவிந்தா கோவிந்தா என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார். திரும்பிப் பார்த்தார். அகத்தியர் மூச்சு வாங்க அவரிடம் ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு வந்தார். பெருமாள் அவரை ஆசுவாசப்படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர்,

``இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க உகந்த நாமம் `கோவிந்தா' என்பதே. நீங்கள் `கோவு - இந்தா' என்று சொன்னதன் மூலம் `கோவிந்தா' என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப்படுத்தினீர். நீர் மட்டுமல்ல, இனி யார் யார் எல்லாம் தம் ஜீவனாகிய பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் `கோவிந்தா' என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும், நான் உடனடியாக அவர்களை நோக்கி அனுக்கிரகம் செய்வேன்" என்று சொல்லி விடைபெற்றுத் திருமலையில் குடிபுகுந்தான்.

No comments:

Post a Comment