தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலம் ஆகும். கயிலாயத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்ற போது திருக்கல்யாணத்தை காண தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வந்தனர். இதனால் வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. பூமி தேவியின் பாரத்தை சமம் செய்வதற்காக சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவன், பார்வதி திருக்கல்யாணத்தை காண முடியாமல் மனம் வருந்திய அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தருவதாக அருள் பாலித்தார். அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள நடனபுரீஸ்வரர் திருக்கோவிலில் அகத்திய முனிவரின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் கார்த்தியாயனி சமேத கல்யாணசுந்தரராய் அகத்தியருக்கு காட்சித்தந்து அருளினார்.
அகத்தியருக்குக் காட்சி கொடுத்த இறைவன் அவருக்கு இரண்டு வரங்களையும் கொடுத்தார். அதன்படி இத்தலத்திற்கு வந்த நடனபுரீஸ்வரரை வழிபட்டால் திருமணம் தடைபடுகிறவர்களுக்கு திருமணத் தடைகள் விலகும் என்றும், தங்கள் வாழ்விலுள்ள சகல தடைகளும் தீக்கி கயிலாயத்தை தரிசித்தால் ஏற்படும் பலன் கிட்டும் என்றும் அருள் புரிந்தார். ஆகையில் இத்தலம் திருமணத் தடை நீங்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
No comments:
Post a Comment