சிவனும் மகாவிஷ்ணுவும பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சினங்கொண்ட சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் உருவெடுத்து, பூமியில் உழன்று, பின்னர் தன்னை அடையும்படி சாபம் இடுகிறார். சிவபெருமான் உமையவளைப் பசு ஆகும்படி சபித்தது தேரழுந்தூரில் தான் என்று அவ்வூர் புராண வரலாறு கூறுகிறது.
திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று ந்தியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள்.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி.
விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார்.
நான்முகனான ஸ்ரீபிரம்மா, புரோகிதர் ஸ்தானத்தில் இருந்து சிவ பார்வதி திருமண வைபவத்தை நடத்தி வைத்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்தத் திருமணக் காட்சியை தூணில் சிற்ப வடிவமாகத் தரிசிக்கலாம்!
திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். உத்ஸவரின் திருநாமம் உத்வாக நாத ஸ்வாமி. அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயணர். ஸ்ரீதேவி, பூதேவி. சகிதமாக இருக்கும் உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள்.
சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றார். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது. கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முக்கியமான திருவிழா அவரது திருக்கல்யாணம்தான். அந்தத் திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.

No comments:
Post a Comment