கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு திருமால் இத்தலத்தில் ராமபிரானாக காட்சி அளித்ததால் கபிஸ்தலம் என பெயர் ஏற்பட்டது
புகூ என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து கபிஸதலத்தில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். ஒருநாள் அந்த குளத்தில் குளித்து கொண்டு இருந்த காசிப முனிவரின் காலை கந்தர்வன் பிடித்து இழுத்தான். உடனே கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாக போகும் படி சாபமிட்டார். கந்தர்வன் முதலையாக மாறி பெருமாளிடம் சாபவிமோசனம் வேண்டி இந்த குளத்தில் இருந்து பிரார்த்தனை செய்து வந்தான்.
முதலையாக மாறி இருந்த கந்தர்வன் ஒருநாள் மலர் பறிக்க வந்த கஜேந்திரனின் காலை பிடித்து கொண்டான். முதலையின் பிடியில் இருந்து யானை தனது காலை விடுவிக்க முயல, யானையை முதலை தண்ணீருக்குள் இழுக்க, ஒராயிரம் வருட காலங்கள் இந்த போராட்டம் நீடித்தது.
கடைசியாக கஜேந்திரன் பகவானின் பாதத்தை சரணடைந்து மூர்த்தியான பகவான் ஸ்ரீமன் நாராயணன் சங்கு. சக்கரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். முனிவரின் சாபம் நீங்க பெற்ற முதலை, கந்தர்வனாக ஆனது. கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொண்டார்.
தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட் சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வலது கரத்தில் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக் கிறார். பொற் றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார் உடனிருக் கின்றனர். இங்கு சக்கரத்தாழ்வார், நரசிம் மருக்கு தனி சன்னதிகள் உள்ளன. வருடந்தோறும் ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் உற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது
No comments:
Post a Comment