Friday 7 April 2023

மண்ணின் மேல் விழும் எந்த விதையும் மக்க வைக்காமல் மாறாக உயிர் பெற செய்யும்.

Seed Ball Making

வீரியமிக்க விதைப்பந்தை உருவாக்குவது எப்படி?

  • விதை பந்து தயாரிக்கும் போது தண்ணீரோடு, சிறிது கோமியம் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பசுச்சாணத்தோடு மண்புழு உரம் சேர்த்தால் வீரியம் அதிகரிக்கும்.
  • கறையான் மற்றும் புற்று மண்ணைப் பயன்படுத்தும் போது விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
  • விதை பந்து கலவையில் சிறிது சாம்பலைச் சேர்த்து தயாரிக்கலாம், அல்லது விதைப்பந்துகள் மீது  ஈர நிலையில் இருக்கும்போது சாம்பலைத் தூவிவிட்டால் பூச்சிகள் தாக்காது.
  • ஈரப்பதம் உள்ள விதைகளை அப்படியே விதைப்பந்துகளில் பயன்படுத்தலாம். கடினமான தோல் கொண்ட விதைகளாய் இருப்பின் வெதுவெதுப்பான நீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து தயாரிக்கலாம். இதனால் விதைகளின்  முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
Seed Ball

விதை பந்து தயாரிக்கும் முறை

  • தோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண்)
  • விலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம்)
  • நாட்டு மர விதைகள்
  • மண்:விலங்கு கழிவு: விதை = 5 : 3 : 1 என்ற அளவில் எடுத்து விதையை உள்ளே வைத்து மூட வேண்டும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சிறிதளவு நீரூற்றி பிசைந்து நடுவே, சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு  எதுவும் ஏற்படாமல் நன்கு காய்ந்து விடும்.
  • நாம் உருவாக்கிய இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும்.
  • விதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி,  செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று  தன்னை  மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.
Indian Varieties

விதைக்க ஏற்ற மரங்கள்

  • வேம்பு
  • புங்கன்
  • கருவேல்
  • வெள்வேல்
  • சந்தனம்
  • சீத்தா
  • வேங்கை
  • மகிழம்
  • வாகை
  • கொய்யா
  • புளி
  • ஆலமரம்
  • அரசு
  • புன்னை 
  • வில்வம்
  • வள்ளி
  • கருங்காலி
  • நாகலிங்கம்

இவ்வகை நாட்டு மரங்கள் விதை பந்து தயாரிக்க உகந்தவை.

Seed Ball Surface

விதை பந்துகளை தூக்கி எறியும் போது கவனிக்க வேண்டியவை

  • தரிசு மற்றும் கட்டாந்தரைகளில் வீச கூடாது.
  • விவசாய நிலங்களில் வீசப்படும் போது விதைப்பந்துகள் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
  • பருவநிலையை கருத்தில் கொண்டு விதை பந்துகளை வீசும் வேண்டும்.
  • சூழலுக்கேற்ற மரங்கள், விதைப்புக்கான இடம் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே வீசும் விதைப்பந்துகள் சரியாக முளைக்கும்.
  • பொதுவாக ஈரப்பதம் உள்ள மண்ணில்தான் விதைகள் முளைக்கும் என்பது நாம் அறிந்ததே,எனினும் தூக்கி எறியப்படும் விதைகளுக்கு தண்ணீர் விடுவது இயலாதது. அதனால், தமிழகத்தின் மழை மாதங்களான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகளை வீசினால் நல்ல பலன் கிடைக்கும்

Thursday 25 June 2020

Arulmigu Balaganapathy & Vengatachalapathy Temple - Keelaveli


Urcharvar  Vinayagar
 

Vengatachalapathy Temple Sannathi

Amuthu Padayal(Kamba sevai)



Palli konda perumal

Bala ganapathy Sannathi


Temple :  Arulmigu Balaganapathy & Vengatachalapathy Temple - Keelaveli.

Location: Keelaveli, Kuttalam (tk), Mayiladuthurai district, Tamil Nadu.


அருள்மிகு மகா காளியம்மன் ஆலயம் - கிழவெளி


  • குத்தாலம் தாலுக்கா கிழவெளி கிராமத்தில் அருள்மிகு  மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
  • இந்த ஆலையம் காவிரி  பாயும்  மஞ்சளாறு ஆற்றங்கரையில் மேற்கு புறம் அமைந்துள்ளது.
  • ஆலயத்து அம்மன் வடக்கு நோக்கி  இடுகாட்அடை பாத்து அமைந்துள்ளது.
  • ஆலயத்தின் சுற்றிலும் தென்னை மரங்கள் அருகே குளம் , ஆறு என அழகாக அமைந்துள்ளது.
  • ஆலயத்தின் அருகே உள்ள மஞ்சலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட லிங்கம் பிறிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ,வினாயகர் சன்னதியும் உள்ளது.
  • இவ்வூரில் கிழக்கில் அவ்வாலயமும் மேற்கில் அருள்மிகு பாலகணபதி மற்றும் வெங்கடஜலபதி ஆல்பமும் அமைந்துள்ளது.
  • இவ்வாலயத்தில் சித்திரை பவுர்ணமி அன்று காலை கரகமும் காவடி எடுத்து மாலையில் கஞ்சிவார்த்தல் நடைபெறும்.
  • ஆடி மாதம் கரகம் என திருவிழாக்கள் நடைபெறுகின்றன.